Thursday, June 2, 2011

நெகிழ்வுத்தன்மை...

மனங்களின் சங்கமம் திருமணம்...ஆனால் தற்போது யார் மனச்சங்கமத்தினை பார்க்கிறார்கள்...மதங்களும் சமூகமும் சங்கமம் ஆக வேண்டும் என்றுதான் பார்க்கின்றனரே தவிர பிள்ளைகளின் மனங்கள் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நினைக்க மறுக்கின்றனர்...என்ன கொடுமைங்க இது?...எனது தந்தையின் எண்ணங்கள் 1960... எனது எண்ணங்கள் 1990 முதல் 2000... அதே சமயம் வரவிருக்கும் எனது பிள்ளையின் எண்ணங்கள் 2025... ஆகவே நான் கொஞ்சம் அவனது எண்ணங்களுக்கு தகுந்தவாறும் கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும்...அதுதான் நான் அவனுக்கு கொடுக்கும் சந்தோஷம்...

அதற்காக பிள்ளைகளும் தாய் தந்தையர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்...கால மாற்றம் நாகரிகம் என்கிற பெயரில் அவர்கள் மனங்களை புண் படுத்த கூடாது...பெற்றோர் கொடுக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது...